கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மனைவி கண்ணீர் மல்க பேட்டி..! கணவரை கண்ணில் கூட காட்டவில்லை...
Oவிஜய் கடந்த 27ம் தேதி பிரச்சார பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக கரூர் நகர காவல் துறையினர் தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மாநில பொதுச் செயலாளர் ஆனந்த், துணை பொது செயலாளர் நிர்மல் குமார் மற்றும் சிலர் மீது வழக்கு பதிந்து ஏ எஸ் பி பிரேம் ஆனந்த் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலை மறைவாக இருந்தவர்களை கைது செய்ய தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியில் உள்ள கட்சி நிர்வாகி வீட்டில் இருந்த கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மதியழகனின் மனைவி ராணி, அவரை கைது செய்து போலீசார் தற்போது வரை எங்கு வைத்து உள்ளனர் என்ற தகவலை தெரிவிக்க வில்லை என்றும், கூட்ட நெரிசலில் சிக்கி தானும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து நேற்று தான் வீடு திரும்பியதாகவும், தனது கணவரை போலீசார் எங்கு வைத்துள்ளார்கள் என்ற இடத்தை கூறுமாறு கண்ணீர் மல்க கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், அஜித் குமார் லாக்கப் டெத் போல் என் கணவருக்கு எந்த சூழலும் ஏற்பட்டு விடக்கூடாது. சிறு கீறல் ஏற்பட்டால் கூட காவல்துறை தான் பொறுப்பு. என் கணவர் சட்டத்தை மதிப்பவர். கைது செய்யப்பட்ட கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மனைவி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

