"பாலியல் தொல்லையால் சாகுற கடைசி பொண்ணு நானா தான் இருக்கணும்" - மீண்டும் ஒரு மாணவி தற்கொலை!

 
மாணவி கடிதம்

பள்ளி மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகியுள்ளது. சமீபத்தில் கோவை மாணவி தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டார். இது பெரும் சர்ச்சையானது. அந்த ஆசிரியர் மட்டுமல்லாமல் மாணவி உயிருடன் இருக்கும்போது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இச்சூழலில் கரூரில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாணவி கடிதம்

கரூர் மாநகராட்சியில் வசிந்துவந்த அந்த மாணவி தனியார் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்துவந்தார்.  நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்று மீண்டும் மாலையில் மாணவி வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் மாணவி நீண்ட நேரமாக வெளியில் வராததை கண்டு வீட்டினுள் சென்று பார்த்துள்ளார். அப்போது மாணவி தூக்கில் இருந்ததைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார். உடனடியாக அவரது தாயாருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

Sexual harassment of the girl || சிறுமிக்கு பாலியல் தொல்லை

அவர் வந்த பிறகு வெங்கமேடு காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். அங்கு வந்த காவல் துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் மாணவி எழுதிய கடிதம் ஒன்றையும் போலீஸார் கண்டுபிடித்தனர். அந்தக் கடிதத்தில், "பாலியல் சீண்டலால் சாகுர கடைசி பொண்ணு நானாக தான் இருக்கணும், என்ன யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு, இந்த பூமியில் வாழரதுக்கு ஆசைப்பட்டேன். 

பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பொண்ணு நானாதான் இருக்கணும்! கடிதத்துடன்  தற்கொலை செய்துகொண்ட பிளஸ்2 மாணவி… – www.patrikai.com

ஆனா, இப்போ பாதியிலேயே போரேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும். பெரிதாகி நிறைய பேருக்கு உதவி பன்ன ஆசை ஆனா முடியல...ஐ லவ் அம்மா, சித்தப்பா, மணி மாமா, அம்மு உங்க எல்லோரையும் ரொம்ப பிடிக்கும், ஆனா நான் உங்கிட்ட எல்லாம் சொல்லாம போகிறேன்... மன்னிச்சுருங்க என்றும், இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக் கூடாது என்றும், சாரி மச்சான் சாரி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதத்திலும் யார் காரணம் என்பதை மாணவி சொல்லவில்லை என்பதால், குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.