விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? - சிபிஐ சந்தேகம்

 
Karur stampede

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Karur stampede: Central Bureau of Investigation probing TVK chief Vijay for  moving his vehicle into crowd beyond permission - India Today


கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி நடந்த இந்தத் துயரச் சம்பவத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜய்யிடம் சுமார் 7 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து விஜய்யிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. உரிய தடத்தில் செல்லாமல் வாகனம் மாறியதே கூட்ட நெரிசலைத் தூண்டிவிட்டதாகத் தமிழக காவல்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இதையடுத்து கரூர் பொது கூட்டத்தின்போது அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே விபத்துக்குக் காரணம் என சிபிஐ சந்தேகிக்கிறது. அதாவது, குறிப்பிட்ட இலக்கை விட சுமார் 20 மீட்டர் தூரம் கூடுதலாக வாகனம் முன்னேறிச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.