கரூர் கூட்டநெரிசல் வழக்கு - ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்திடம் 10 மணிநேரம் சி.பி.ஐ விசாரணை

 
ச் ச்

கரூர் சிபிஐ அலுவலகத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனன் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

டிஜிட்டல் திண்ணை: விஜய்க்கு 'தூபம் போடும் 'சகா'? கடுப்பில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ்  அர்ஜூனா! Bussy Anand and Aadhav Arjuna Furious in TVK

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் பிரச்சார பரப்பரை கூட்டத்தின் போது கூட்ட நெரிசலை சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தின் போது பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் , வணிக நிறுவன தடை உரிமையாளர்கள், நெடுஞ்சாலை துறை அதிகாரியினர் , மின்சார துறை அதிகாரிகள், பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், காயம் அடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிபிஐ அதிகாரிகள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தின் பனையூர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டிருந்த பேருந்தின், சிசிடிவி காட்சிகளை கேட்டு சம்மன் கொடுத்தனர். அதனை தொடர்ந்து தவெக நிர்வாகிகள், வழக்கறிஞர் சிசிடிவி காட்சிகளை கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் இன்று சிபிஐ விசாரணைக்காக நேரில் ஆஜராகினர். பிரச்சார பரப்புரையின் போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்களிடம் சம்பவ நாளன்று நடந்த நிகழ்வுகள், பிரச்சார பேருந்தின் சிசிடிவி காட்சிகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 8.30 மணியளவில் நிறைவடைந்தது. 10 மணி நேரமாக அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டர். மீண்டும் அவர்களிடம் நாளை விசாரணை தொடரும் என்றும் கூறப்படுகிறது.