விஜய் பேச துவங்குவதற்கு முன்பே 3 பேர் உயிரிழப்பு- துரைமுருகன்
விஜய் பேச துவங்குவதற்கு முன்பாகவே கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர் என யூடியூபர் சாட்டை துரைமுருகன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

விஜய் பேச துவங்குவதற்கு முன்பாகவே கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர் !
— Duraimurugan (@Saattaidurai) September 28, 2025
விஜய்யின் பிரச்சார வாகனத்தின் உள்ளே இருந்தவர்கள் ஆதவ் அர்ஜூனா உட்பட அனைவருக்கும் மக்கள் மரணிப்பதை பார்த்தும் விஜய்க்கு தகவல் தெரிவிக்காமல் தொடர்ந்து அவர் பேசிக்கொண்டுருந்துள்ளார் !
கொண்டாட்ட… pic.twitter.com/Dd5s9LNxYY
இதுதொடர்பாக யூடியூபர் சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் தளத்தில், “விஜய் பேச துவங்குவதற்கு முன்பாகவே கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர் ! விஜய்யின் பிரச்சார வாகனத்தின் உள்ளே இருந்தவர்கள் ஆதவ் அர்ஜூனா உட்பட அனைவருக்கும் மக்கள் மரணிப்பதை பார்த்தும் விஜய்க்கு தகவல் தெரிவிக்காமல் தொடர்ந்து அவர் பேசிக்கொண்டுருந்துள்ளார் ! கொண்டாட்ட மனநிலையும் ,எந்த விதிகளையும் பின்பற்றாத தொண்டர்களும் ,கூட்டத்தை பெரிதாக காட்ட வேண்டும் என்கிற மாஸ் மனநிலையும் மட்டுமே இம்மரணங்களுக்கான முதன்மை காரணம் ! 10 ஆயிரம் காவலர்கள் இருந்திருந்தாலும் , ஏன் துணை இராணுவமே வந்தாலும் ரசிக மனநிலையில் உள்ள கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாது !” எனக் குறிப்பிட்டுள்ளார்.

