#BREAKING கரூர் விஜய் பிரச்சாரத்தில் நெரிசல் - 28 பேர் பலி

 
ச்

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட இடத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் 28 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களில் 10 பேர் பெண்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கரூர் விஜய் பரப்புரை கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது. பலரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்.கரூரில் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நாளை காலை கரூர் விரைகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தின் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த விவகாரத்தை போர்க்கால அடிப்படையில் கையாள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்