40 துப்பாக்கி குண்டுகள்... கருணாஸின் கைப்பையை சோதனை செய்த போது ஒலித்த அலாரம்

 
சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் சென்னையில் உள்ளே தனியார் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸின் கைப்பையை சோதனை செய்த போது 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Image


நடிகர் கருணாஸிடம் சென்னை விமான நிலையத்தில் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். திருச்சி செல்ல வந்த கருணாஸின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவரது கைப்பையை பரிசோதித்தபோது அதில் துப்பாக்கி குண்டுகள் இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்யப்பட்டது. உடனே கருணாசின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

துப்பாக்கி உரிமம் தன்னிடம் இருக்கிறது, குண்டுகள் இருப்பது தெரியாமல் பையை எடுத்து வந்ததாக அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார்.