தமிழிலிருந்து பிறந்தது கன்னடம் மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம்- கருணாஸ்
தமிழிலிருந்து பிறந்தது கன்னடம் மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளும்தான் என நடிகர் கமலஹாசன் பேச்சுக்கு நடிகர் கருணாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திரைப்படவிழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, தமிழில்இருந்து தான் கன்னடம் பிறந்தது என பேசினார். அதற்கு கர்நாடகமே கர்வம்கொண்டு கண்டனம் தெரிவிக்கிறது. எப்போது மொழி வரலாற்றை அறியாதவர்கள் வழிதவறிதான் பேசுவார்கள்!
தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று கமலஹாசன் அவர்கள் கூறியது. மிகச்சரியானது மட்டுமல்ல; அது உண்மையும் கூட நான் அவர் பேசுயதை முழுமையாக வரவேற்கிறேன்!
தமிழிலிருந்து பிறந்தது கன்னடம் மட்டுமல்ல, தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளும்தான்!
உலக மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி தமிழ்தான் என்றுஅமெரிக்க மொழியியல் அறிஞர் நோம் சாம்சுகி கூறினார்!
கன்னடம் ஆறாம் நூற்றாண்டுலிருந்து 8 ஆம் நூற்றுண்டுக்குள் தமிழிலிருந்து பிரிந்த மொழி!
10ஆம் நூற்றாண்டிலிருந்து 14 ம் நூற்றாண்டிற்குள் தமிழிலிருந்த கிளைத்த மொழி மலையாளம் !
அதனால்தான் ஒப்பிலக்கணக்கம் எழுதிய கால்டுவெல் திராவிடமொழி குடும்பம் என்று தமிழ்மொழிக் குடும்ப மொழிகளாக கன்னடம் தெலுங்கு மலையாளத்தை சுட்டிக் காட்டினார்!
அது மட்டுமல்ல தமிழ் மொழியிலிருந்து தோன்றியதுதான்மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள் என்பதை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட பல்வேறு மொழியில் அறிஞர்கள் தக்க சான்றுகளோடு நிரூபித்துள்ளனர்.
அதனால்தான் `இந்திய வரலாறு என்பது தெற்கிலிருந்து தொடங்கவேண்டும்' என்பதையும் `திராவிட மொழிகள் தமிழ் மொழியிலிருந்துஉருவானவை' என்பதையும் சான்றோடு பாவணர் சான்றுகளோடுஎடுத்து வைத்தார்!
தமிழின் தொன்மை, ஒலியெளிமை, பிற மொழி கலவாத் தூய்மை, சொல்வளம், செம்மை ஆகியவற்றை மற்ற மொழிகளோடு ஒப்பிட்டும்இந்தி மொழிக்குக்கூடத் தமிழ் இலக்கணம் பொருந்துவதையும்நிறுவுகிறார். உலக மொழிகளின் ஒட்டுமொத்தத் தன்மையையும்ஒருங்கே கொண்டதால் தமிழே `முதற்றாய் மொழி' என்கிறார் அவர்!
கன்னடத்தில், தெலுங்கில் கலந்துள்ள பிராக்ருதம், சமஸ்கிருதம்போன்ற பிறமொழிகளை நீக்கினால் அந்த மொழியின் அடையாளம் என்னவாகும்!
அதே போல் மலையாளத்தில் உள்ள தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளைநீக்கினால் மலையாள மொழியும் அதன் தன்மையை இழந்துவிடும்!
ஆனால் தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களை நீக்கினால் தமிழ் இன்னும் தனித்து வாழும் தன்மை கொண்டது என்பதையும் பாவாணர் சுட்டிக் காட்டியுள்ளார்!
இது மேற்கண்ட மொழிகளில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள பல்வேறு மொழிகளின் வேர்ச்சொற்கள் தமிழாக உள்ளது என்பதை பல இந்நாட்டு மொழியியல் அறிஞர்கள் மட்டுமல்ல, பன்னாட்டு மொழியில் அறிஞர்கள் நிரூபித்தது!
5000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழுக்கு இலக்கணம் சொல்லும்நூலான தொல்காப்பியம் தோன்றிவிட்டது. அதற்கும் முன்பே பலஇலக்கண நூல்கள் இருந்த உண்மையைத் தொல்காப்பியமேகூறுகின்றது.
ஆரிய படையெடுப்பால் சிதைந்த தமிழர் மரபை மீட்க, நம்மிடம்எஞ்சி நிற்கும் ஒரே கருவி மொழிதான். `எல்லா சொல்லும் பொருள்குறித்தனவே’ என்கிறார் தொல்காப்பியர். தமிழ் என்பது, வெறும்மொழியன்று... கலை, நாகரிகம், பண்பாடு, மரபு, கலாசாரம் எனத்தமிழ் மொழி தாங்கியுள்ள கூறுகளை வெளிக்கொணர்வதே தற்கால தமிழ்ச் சமூக செய்ய வேண்டிய முதல் கடமை!
உண்மையைச் சொன்னால், பலருக்கு கசக்கத்தான் செய்யும்! கலங்காது கற்பிப்போம்! தமிழே உலகத்தின் மூத்தமொழி!! மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி!!" எனக் குறிப்பிட்டுள்ளார்.


