கருணாநிதி நூற்றாண்டு விழா - முதல்வர் நாளை ஆலோசனை

 
karunanidhi

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

kalaignar

முன்னாள் முதலமைச்சரும்,  திமுக தலைவருமான கருணாநிதி 1924 ஆம் ஆண்டு பிறந்த நிலையில்  அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது . கலைஞர் நூற்றாண்டு விழா வருகிற ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் திருவாரூர் மாவட்டம் காட்டூரில்  கலைஞர் கோட்டம்  திறப்பு விழா நடைபெறும் என்றும்  அகில இந்திய தலைவர்கள் இதில் கலந்துகொண்டு பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இவ்விழாவை சிறப்பாக நடத்த திமுக திட்டமிட்டுள்ள நிலையில்,  இது குறித்து விவாதிக்க வருகிற 20ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெறவுள்ளது.

stalin

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக அமைச்சர்கள் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.