கலைஞர் பிறந்தநாள் - ஜூன் 10ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல்

 
சர்க்கரை பொங்கல்

கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜூன் 10ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

tn


சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு மே மாதம் வெளியிட்டது.  தமிழ்நாடு முழுவதும் உள்ளான காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல கருணாநிதி பிறந்த நாளன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்திருந்தார். 

இந்நிலையில் கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் மூன்றாம் தேதி கோடை விடுமுறையில் சென்றதால், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான ஜூன் 10 ஆம் தேதி அன்று அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க சமூக நல ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.