தமிழா தமிழாவில் இருந்து வெளியேறினார் கரு.பழனியப்பன்

 
tஅ

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் இயக்குநர் கரு.பழனியப்பன். 

இயக்குநர்கள் ராதகிருஷ்ணன் பார்த்திபன் , எஸ்.எழில் ஆகியோரிடம் பணிபுரிந்து விட்டு பார்த்திபன் கனவு படம் மூலம் இயக்கநராக அறிமுகமானார் கரு. பழனியப்பன் .  தொடர்ந்து சதுரங்கம், சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப்புன்னகை உள்ளிட்ட படங்களை இயக்கினார். 

க்

 மந்திரப் புன்னகை படத்தின் மூலம் இவர் நடிகராகவும் அவதாரம் எடுத்தார்.  அதை அடுத்து எழுத்தாளர் சந்திரா இயக்குநராக அறிமுகமான கள்ளன் திரைப்படத்தில் நாயகனாகவும் நடித்தார்.   இதன் பின்னர் அவர்  அருள் நிதியை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தார்.  அதன் பின்னர் திரைப்படங்களை இயக்குவதை நிறுத்திக் கொண்டு மேடை பேச்சுகளில் தீவிரமாக இயங்கினார். 

 தீவிர திராவிட இயக்க சிந்தனையாளர் ஆன , குறிப்பாக திமுக ஆதரவு நிலையில்  இருந்த கரு. பழனியப்பன் பாஜக பிரமுகருக்கு சொந்தமான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.   விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா என்ற வெற்றிகரமான தொடரை போன்று தமிழா தமிழா நிகழ்ச்சியும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்தது. 

ப

 பாஜக பிரமுகர் ஒருவரின் தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியில் கரு.பழனியப்பன்  திராவிட இயக்க சிந்தனை கருத்துக்களை அதிகம் பேசி வந்தது  பெரிதும் வியப்பை ஏற்படுத்தியது.   இந்த நிலையில் கரு.பழனியப்பன் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.  அதனால் அந்த நிகழ்ச்சி முடிவுக்கு வருகிறது என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.  

 இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,   ‘’ஜீ தமிழ் உடனான நான்கு வருட" தமிழா தமிழா" பயணம் இனிதே முடிவுக்கு வந்தது.!  சமூகநீதி, சுயமரியாதை, திராவிடம்  என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! நன்றி! ’’ என்று பதிவிட்டிருக்கிறார்.