பாலியல் புகார் அளித்த பெண்ணை மிரட்டிய கரு.நாகராஜன்?

 
ச்

பாலியல் புகார் தெரிவித்தமைக்காக தனக்கு கரு.நாகராஜன் கொலை மிரட்டல் விடுத்ததாக சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மீது மாவட்ட மகளிரணி தலைவர் தங்க சோபனா பாலியல் புகார் கூறி அண்மையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் கரு.நாகராஜன், வலுக்கட்டாயமாக அறைக்குள் அழைத்து கிஸ் அடிக்க முயற்சி செய்திருக்கிறார். காருக்குள் வைத்து பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்திருக்கிறார். பாலியல் இச்சைக்கு இனங்கவில்லை என்றால் கேரியரையே க்ளோஸ் செய்து விடுவேன் என்று மிரட்டியிருப்பதாக குற்றஞ்சாட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் பாலியல் புகார் தெரிவித்தமைக்காக தனக்கு கரு.நாகராஜன் கொலை மிரட்டல் விடுத்ததாக சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். கட்சி நிர்வாகிகளை ஏவி தன்னை ஆபாசமாக வசைபாடி கொலை மிரட்டல் விடுத்தாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் கரு.நாகராஜன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண், கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.