அண்ணாமலை மாற்றமா?- கரு. நாகராஜன் விளக்கம்!

பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்படுகிறாரா? என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற பாஜக தேசியத் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலைக்கு பதில் புதிய மாநிலத் தலைவரை நியமிக்கவும் பாஜக மேலிடம் தீவிர ஆலோசனை மேற்கொண்டுவருகிறது. புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பெயர்களும் தலைவர் பதவிக்கு பரிசீலனையில் உள்ளன.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்படுகிறாரா? என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். 3 வருடங்களுக்கு ஒருமுறை மாநிலத் தலைவரை மாற்றுவது என்பது பாஜக-வில் வழக்கமான நடைமுறைதான். அண்ணாமலைக்கு என்ன பொறுப்பு தரவேண்டும் என்பதை தேசிய தலைவர்கள் முடிவுசெய்வர், அந்த முடிவை அறிய நாங்களும் ஆவலோடு, ஆர்வத்தோடு காத்திருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.