#BREAKING பாஜகவில் இருந்து கரு.நாகராஜன் விலகல்

 
கரு நாகராஜன்

பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள கரு.நாகராஜன், அண்ணாமலையின் இயக்கத்திற்கு ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன், “பாஜகவில் இருந்து விலகுகிறேன். கரு.நாகராஜன், அண்ணாமலையின் இயக்கத்திற்கு ஆதரவளிக்கவுள்ளேன். அண்ணாமலைக்கு அணிலாக இருந்து உதவுவோம். அண்ணாமலை ஆற்றல் மிக்க துணிச்சலான தலைவர். அனைத்து துறைகள் குறித்தும் பேசும் திறன்கொண்ட ஆற்றல் மிக்க துணிச்சலான தலைவர் அண்ணாமலை. விஜய் மட்டுமல்ல, யார் தவறு செய்தாலும் அண்ணாமலை சுட்டிக்காட்டுவார். பாஜகவை மக்களிடம் கொண்டு சென்றவர் அண்ணாமலை, பதவியில் இல்லாவிட்டாலும் மக்களை ஈர்த்தவர்” என்றார்.

இதேபோல் பாஜக கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் மற்றும் மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன் ஆகியோர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.