“நமக்கு இருப்பது ஒரே choice only choiceதான். அது மு.க.ஸ்டாலின்தான்”- கார்த்தி சிதம்பரம்
நமக்கு இருப்பது ஒரே Choiceதான்... அது மு.க.ஸ்டாலின் என காரைக்குடி தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காரைக்குடி தேர்தல் பரப்புரையில் உரையாற்றிய காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “நமக்கு இருப்பது ஒரே choice only choiceதான். அது மு.க.ஸ்டாலின்தான். ஸ்டாலினைத்தவிர வேறு யாருக்கும் இங்கு முதலமைச்சராகும் தகுதி இல்லை.. கடந்த 10 ஆண்டுகளில் ஸ்டாலின் அவர்கள் கொச்சையாகவோ அல்லது கொடுஞ்சொல் சொல்லியோ அவர் யாரையாவது திட்டினார் என்று அவரை விமர்சிப்பவர்கள் சொல்ல முடியுமா? கூட்டணிக் கட்சியினரை கனிவில்லாத வகையில் நடத்தியுள்ளாரா? ஸ்டாலின் பெரிய மனுஷன் ஆகிவிட்டார். இன்று ஒரு பெரிய மனுஷன் அனுபவசாலி முதலமைச்சர் ஆகணுமா? இல்லை பிஜேபியின் முகமூடி முதலமைச்சர் ஆகணுமா? இல்லை எந்த அனுபவமும் இல்லாமல் யாருடனும் பழகாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்ற நடிகர் ஆகணுமா? இல்லை எந்தவித கொள்கை கோட்பாடும் இல்லாமல் வெறும் உணர்வுகளை மட்டும் தூண்டக் கூடிய வகையில் பேசுபவர்கள் முதலமைச்சர் ஆகணுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.



