‘வெள்ளை அறிக்கை வேண்டும்’ - மேயர் பிரியாவுக்கு லெட்டர் போட்ட கார்த்தி சிதம்பரம் எம்.பி.,
கூவம் ஆறு மறு சீரமைப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மேயர் பிரியாவுக்கு , சிவகங்கை எம்.பி, கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் அடையாளமாக உள்ள கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை சீரமைப்பதற்காக , சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்காக இந்த அறக்கட்டளைக்கு 2015 -2016ம் ஆண்டு முதல் ரூ.1,479 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, தூர்வாருதல், அகலப்படுத்துதல், கரைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்காகவும், இந்த இரு ஆறுகளின் கரைகளில் வாழ்ந்த மக்களை அப்புறப்படுத்தி வேறு இடங்களில் குடியமர்த்துவதற்காகவும், ஆறுகளில் கழிவுநீரைக் கொட்டும் குழாய்களை அடைப்பதற்காக மற்றும் சுற்றுச்சுவர், வேலிகளை அடைப்பதற்காக நிதி செலவிடப்படுவதாக கூறப்பட்டு வருகிறது.
ஆனால், நதிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் இதுவரை எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. ஆகையால் கூவம் ஆறு மறுசீரமைப்பு திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மேயர் பிரியாவுக்கு காங்கிரஸ் எம்.பி., கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கூவம் நதியை சீரமைக்க மாநில அரசு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ஏற்கனவே ரூ.329 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தற்போதைய சவால்கள், ஆற்றின் நிலை, திட்டமிடப்பட்ட மற்றும் உண்மையான விளைவுகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகளை பற்றி தெரிவிக்க வேண்டும்.
சென்னை நீர்நிலைகளில் தினமும் விடக்கூடிய சுத்திகரிக்கப்படாத கழிவு நீரில் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் கூவம் ஆற்றிலும், 60% பக்கிங்காம் கால்வாயிலும், மீதம் உள்ளவை அடையாறு ஆற்றலும் கலக்கின்றன. நீர் நிலைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் இந்த ஆறுகளில் திடக்கழிவு மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆகியவை தினம் தோறும் வெளியேற்றப்படுகின்றன. எனவே அடையாறு சிற்றோடையின் சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு, அடையாறு சிற்றோடையின் முகத் துவாரம், மற்றும் கூவம் ஆறு மறுசீரமைப்பு ஆகிய திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
My letter seeking a white paper to @PriyarajanDMK Mayor @chennaicorp regarding #CRRT pic.twitter.com/YY4CCHGcms
— Karti P Chidambaram (@KartiPC) September 1, 2024
My letter seeking a white paper to @PriyarajanDMK Mayor @chennaicorp regarding #CRRT pic.twitter.com/YY4CCHGcms
— Karti P Chidambaram (@KartiPC) September 1, 2024