“காயத்ரி ரகுராமால் அண்ணாமலைக்கு அச்சுறுத்தல்; ஆகவே z பிரிவு பாதுகாப்பு”

 
annamalai

ரிமோட் வாக்குரிமை , ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது இதை ஏற்றுக்கொள்ள முடியாது என எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

karti chidambaram

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், “ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது. நமது நாடு பாராளுமன்ற, சட்டமன்ற பெரும்பான்மையின் அடிப்படையில் செயல்படுகிறது. தேர்தலில் பெரும்பான்மை பலம் இல்லாத போது என்ன செய்ய முடியும்? அடிக்கடி தேர்தல் வருவது நல்லது. அப்போதுதான் மக்களின் மனநிலை தெரியும். ரிமோட் வாக்குரிமை குறித்து இன்று நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பாஜக தவிர அனைத்து கட்சியும் எதிர்த்து இருக்கிறார்கள். 

பூத் ஏஜெண்ட் எங்கெல்லாம் போட முடியும். வாக்களிப்பது யார் என்று எப்படி தெரியும்?  வெளிநாடுகளில் வசிப்போரை விட உள்நாட்டில் வசிப்போருக்கும் ரிமோட் வாக்குரிமை என்கிறார்கள். இது சாத்தியமற்றது. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையின் Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அவர் கட்சியில் இருந்து விலகியுள்ள அம்மணியால் அச்சுருத்தல் இருக்கலாம். அவர்தான் சவால் விட்டு வருகிறார்” எனக் கிண்டலாக பதில் அளித்தார்.