விஜய் கட்சிக்கு ஒரு எனர்ஜி உள்ளது- கார்த்திக் சிதம்பரம்

 
Karti chidambaram press meet Karti chidambaram press meet

கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில்  சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப.சிதம்பரம் செய்தியாளர்களை  சந்தித்தார். 

Vijay: `தனியாக கட்சி நடத்துவதென்பதை, விஜய் பட்டு தெரிந்து கொள்வார்!' -  சொல்கிறார் கார்த்தி சிதம்பரம் | congress mp karti chidambaram about vijay  tvk party - Vikatan


அப்போது பேசிய கார்த்திக் ப.சிதம்பரம், “இந்தியா கூட்டணி ஒற்றுமையாக வலிமையாக இருக்கிறது, இந்த கூட்டணியில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. எதிரணிகளில் இருக்கக்கூடிய கூட்டணியை எடுத்துக் கொண்டால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி, நான் எப்பொழுதுமே அவர்களின் கூட்டணியை குறைத்து மதிப்பிட்டது கிடையாது. அவர்களுக்கு எல்லா காலகட்டத்திலேயும் நல்ல வாக்கு வங்கி இருந்துள்ளது. இன்னுமே இருக்கிறது. ஆனால் அந்தக் கட்சி தற்போது பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறது. ஆனால் அடிமட்ட தொண்டர்கள் அந்தக் கூட்டணியை விரும்பவில்லை என்பதை நான் கண்கூட பார்க்கிறேன். தற்சமயம் 2024 தேர்தலில் தான் அவர்களுடன் கூட்டணி வேண்டாம் என பிரிந்தோம் அதற்குள் மீண்டும் கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்று அதிமுக தொண்டர்களை கூறுகிறார்கள். அதனால் அவர்களுக்கு இது பின்னடைவாக கூட இருக்கலாம். அதேபோல புதிதாக துவங்கப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து   தெரியவில்லை. கூட்டணி வைப்பார்களா தனித்து போட்டியிடுவார்களா என்பது தெரியவில்லை..

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் புதிதாக துவங்கப்பட்டிருக்கும் விஜயின் கட்சிக்கு ஒரு புதிய எனர்ஜி இருக்கிறது. ஆனால் அந்த எனர்ஜி ஆக்கபூர்வமான அரசியல் கட்சியாக மாறி, தேர்தலை சந்தித்தால் மட்டும் தான் தெரியும். பாமக என்ன நிலை எடுக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.. இன்னும் தெளிவான கூட்டணி வரவில்லை.. என்னை பொருத்தவரை திராவிட முன்னேற்றக் கழகம் தலைமைகளான கூட்டணி வெற்றி பெறும் என்றுதான் நினைக்கிறேன் என கூறினார். அதேபோல புதிய கட்சியின் எனர்ஜியே வாக்கு வங்கியாக மாறும் என்பதை எப்பொழுதும் சொல்ல முடியாது. இது பற்றிய தற்போதைய சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது அதை வெளிவரும் போது அதை பற்றி தெரியும்” என கூறினார்.