இன்று வெளியாகவிருந்த கார்த்தியின் "வா வாத்தியார்" படம் வெளியாகாது - படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு..!
இயக்குநர் நலன் குமாரசாமி (சூது கவ்வும், காதலும் கடந்து போகும் புகழ்) இயக்கத்தில் நடிகர் கார்த்தி தனது 26வது படமான 'வா வாத்தியார்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கார்த்தி எம்.ஜி.ஆர் ரசிகராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, ராஜ்கிரண், சத்யராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியீட்டிற்குத் திட்டமிடப்பட்டது. இப்படம் முதலில் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டு, டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான விளம்பரப் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், இப்படத்தைத் திரையிடத் தடை விதிக்கக் கோரி அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தங்களிடம் இருந்து ₹10 கோடியே 35 லட்சம் கடன் பெற்றதாகவும், அந்தத் தொகையைச் செலுத்தும் வரை படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கடன் தொகையில் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் மட்டுமே தடையை நீக்க முடியும் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் ₹3 கோடியே 75 லட்சம் மட்டுமே செலுத்த முடியும் என்று வாதிட்டது. இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டது. இதன் காரணமாக, 'வா வாத்தியார்' படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.
Due to unforeseen circumstances beyond our control, #VaaVaathiyaar will not be releasing on the planned date.
— Studio Green (@StudioGreen2) December 11, 2025
This has been an extremely difficult decision, especially knowing how passionately everyone has been awaiting the film.
Our heartfelt apologies to fans, partners, and…
Due to unforeseen circumstances beyond our control, #VaaVaathiyaar will not be releasing on the planned date.
— Studio Green (@StudioGreen2) December 11, 2025
This has been an extremely difficult decision, especially knowing how passionately everyone has been awaiting the film.
Our heartfelt apologies to fans, partners, and…


