"சுசித்ரா மன்னிப்பு கேட்க வேண்டும்" - முன்னாள் கணவர் கார்த்திக் குமார் நோட்டீஸ்
தன்னைப் பற்றி பொய்யான கருத்து கூறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாடகியும், முன்னாள் மனைவியுமான சுசித்ராவுக்கு நடிகர் கார்த்திக் குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பிரபல ஆர்ஜேவாகவும், பாடகியாகவும் வலம் வந்தவர் சுசித்ரா. இவரது கணவர் நடிகர் கார்த்திக் குமார். அண்மையில் சுசித்ரா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “யாரடி நீ மோகினி படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் உடன் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமாருக்கு நெருக்கம் ஏற்பட்டது. அவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டனர். உலகையே மாற்றுவோம் என்று அவர்கள் கூறி வந்தனர். திருமணமான இரண்டே ஆண்டுகளில் கார்த்திக் குமார் ஒரு ஓரின செயற்கையாளர் என்பதை நான் தெரிந்து கொண்டேன். கடந்த 14 வருடங்களாக நான் அவரிடம் விவாகரத்து கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் கொடுக்கவில்லை தனுஷ் அவரும் அறையில் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? கார்த்திக் குமார் தனது ஆண் நண்பர்களுடன் அடிக்கடி மும்பையில் ரூம் எடுத்து தங்குவார்” என்று சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.இப்பிரச்சனை கோலிவுட்டில் பூதாகரமானது.

தன்னைப் பற்றி பொய்யான கருத்து கூறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாடகியும், முன்னாள் மனைவியுமான சுசித்ராவுக்கு நடிகர் கார்த்திக் குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பொய்யான கருத்து கூறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்; சுசித்ராவின் கருத்துகள் பொய்யானவை, உறுதிப்படுத்தாமல் நேர்காணலை வெளியிட்டுள்ளனர்; சம்பந்தப்பட்ட நேர்காணலை தனியார் யூடியூப் சேனல் நிர்வாகம் நீக்க வேண்டும், இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் கார்த்திக் குமார் தெரிவித்துள்ளார்.


