“2003ஆம் ஆண்டு தடைக்கு பின் தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு?”

 

“2003ஆம் ஆண்டு தடைக்கு பின் தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு?”

தமிழகத்தின் வளர்ச்சிக்காக பொது லாட்டரி சீட்டு முறையை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய வேண்டும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கார்த்தி சிதம்பரம் எம்பி ஆலோசனை வழங்கியுள்ளார்.

“2003ஆம் ஆண்டு தடைக்கு பின் தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு?”

இதுதொடர்பாக கடந்த ஆண்டே ட்வீட் செய்திருந்த கார்த்தி சிதம்பரம், “தமிழகத்தில் உணர்ச்சி கவர்ச்சியை ஒதுக்கிவிட்டு வளர்ச்சியை மையமாக வைத்து அனைவருக்கும் சமமாக இலவசமாக தரமான மருத்துவம்,கல்வி கிடைக்கப் பெற பொது லாட்டரியினை அறிமுகம் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அதனுடன் ஒரு ஆலோசனைக் கடிதத்தையும் இணைத்திருந்தார்.

அந்தக் கடிதத்தில், “தமிழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ள சூழலில் வாடிக்கையான அரசியலிலிருந்து வளர்ச்சி அரசியலை முன்வைத்து செயல்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். அந்த அடிப்படையில் தமிழகத்தை முன்னேற்றி கொண்டு வருவதற்கு எனது ஒரு சிந்தனையை முன்வைக்கிறேன். தமிழக அரசியலில் உணர்ச்சி, கவர்ச்சியை ஒதுக்கிவுட்டு வளர்ச்சியை மையமாக வைத்து மட்டுமே ஆரோக்கியமான விவாதங்கள் நிறைய நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

“2003ஆம் ஆண்டு தடைக்கு பின் தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு?”

எனது முதல் சிந்தனை

தமிழகத்தில் அனைவருக்கும் சமமாகவும் இலவசமாகவும் தரமான, சிறந்த மருத்துவமும், கல்வியும் கிடைக்க பெற வேண்டும். தமிழக அரசின் சார்பில் பரிசு சீட்டினை (லாட்டரி சீட்டு) முறையாக அனுமதித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை தமிழகத்தில் அனைவருக்கும் சமமாகவும் இலவசமாகவும் தரமான, சிறந்த மருத்துவமும், கல்வியும் கிடைக்க பயன்படுத்த வேண்டும் என்பதே எனது சிந்தனையாகும்.

“2003ஆம் ஆண்டு தடைக்கு பின் தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு?”

எனது இந்த சிந்தனை சற்று சர்ச்சையானதாக இருக்கும். இந்த சிந்தனையை நீங்கள் முழுவதும் படித்து அதனை ஆராய்ந்து தங்களது கருத்துகளை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று எழுதி அதனுடன் ideas4tn1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியும் கொடுத்துள்ளார். தற்போது இந்த ட்வீட்டை ரிமைன்ட் செய்து தற்போது நிதியமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாகராஜனிடம் இதுதொடர்பாக ஆராய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

“2003ஆம் ஆண்டு தடைக்கு பின் தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு?”

2001-2002ஆம் ஆண்டில் அதிகமான குலுக்கல் பரிசு சீட்டுகள் விற்பனையாகும் மாநிலமாகத் தமிழ்நாடு இருந்தது. குலுக்கல் பரிசுச் சீட்டு முடிவுகளை வெளியிடுவதற்கென்றே இரண்டு நாளிதழ்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. அந்தளவிற்கு மவுசு கூடியிருந்தது. தினக்கூலிப் பணியாளர்களும், குறைவான வருமானம் உள்ள ஏழை மக்களும் லாட்டரி சீட்டை வாங்குவதால் குடும்பத்திற்கு உணவு, பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்படுகிறது என்று கூறி அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா 2003ஆம் ஆண்டு தடைவிதித்தார்.