"கேரள மழையால் தான் கர்நாடகா நீர் திறந்தது!": காவிரி விவகாரத்தில் பாமக சௌமியா அன்புமணி சாடல்!
காவிரி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பாமக சௌமியா அன்புமணி, கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் காவேரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் மதிக்கவே இல்லை என்றும், கேரளாவில் அதிகமான மழை பெய்ததன் விளைவாக கபினி அணை நிரம்பியதால் தான் உபரிநீராக தமிழ்நாட்டிற்கு நீர் திறக்கப்பட்டது என்றும், கேரளாவில் இருந்து வரும் தண்ணீர் தான் வேறு வழியில்லாமல் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வந்துள்ளது என்றும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வலியுறுத்தியதோடு, சட்டம் முன்னெடுப்புகளை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்றும் கூறினார். மேகதாது அணை கட்டும் இடம் தமிழ்நாட்டிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது என்று கூறிய சௌமியா, ஒரு சொட்டு தண்ணீர் கூட இங்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில் தான் தமிழ்நாட்டுக்கு மிக அருகில் அணையை கர்நாடக அரசு கட்டுகிறது என்று கூறினார்.
#SowmiyaAnbumani's speech on #MekedatuDam 👏
— Gv (@gowtham0725) August 7, 2026
. pic.twitter.com/E2aSiQksQK

