#BREAKING காவிரியில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகவுக்கு உத்தரவு!
Jul 30, 2026, 16:49 IST1785410389655
தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி ஆற்று நீர் பங்கீடு விவகாரத்தில், தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி வீதம் காவிரி நீரை திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட்டுள்ளது. நேற்று தண்ணீரை திறந்துவிட காவிரி ஒழுங்காற்று குழு கொடுத்த பரிந்துரையை அப்படியே இன்று உத்தரவாக பிறப்பித்துள்ளது காவிரி மேலாண்மை ஆணையம். காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைக்காகவும், மேட்டூர் அணை நீர் மட்டம் மற்றும் பாசன தேவையை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிரப்பிக்கபட்டுள்ளது.

