காவிரியில் தண்ணீரை திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு

 
காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 31,571 கனஅடியாக குறைப்பு.. என்ன காரணம்?

காவிரியில் இருந்து கர்நாடகா தமிழ்நாட்டிற்கு மே மாதம் 2.5 டிஎம்சி தண்ணீரை திறந்து விட காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Image

 

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30 ஆவது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கர்நாடகா அரசு அதிகாரிகள் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்ட நிலையில் தமிழ்நாடு அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டனர். அப்போது கர்நாடகாவில் உள்ள நான்கு முக்கிய அணைகளில் 19.17 டி எம் சி தண்ணீர் உள்ளது அவர்களது குடிநீர் தேவைக்கு நான்கு டிஎம்சி தண்ணீர் போதும் எனவே நிலுவை தண்ணீரை திறந்து விடுவதில் கர்நாடகாவிற்கு எந்த சிக்கலும் இல்லை என தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஆணையத்தின் முன்பு வாதத்தை முன்வைத்தனர்.

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

இதனையடுத்து காவிரியில் இருந்து கர்நாடகா தமிழ்நாட்டிற்கு மே மாதம் 2.5 டிஎம்சி தண்ணீரை திறந்து விட காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இதுவரை சுமார் 6 டிஎம்சி அளவிற்கு கர்நாடகா தண்ணீரை திறந்து விடாமல் நிலுவையில் வைத்துள்ளது குறிப்பிடதக்கது. மேலும் அடுத்த கூட்டம் ஜூன் மாதத்தில் விரைவில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்:

https://whatsapp.com/channel/0029VaDmE2aGehELVeirsJ2r