கர்நாடக அமைச்சர் பி.நாகேந்திரா கண்ணீருடன் ராஜினாமா..!

 
11

கர்நாடக திட்டமிடல் துறை அமைச்சர் பி.நாகேந்திராவுக்கு எதிரான ஊழல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் சிறப்பு விசாரணைக் குழு (SIT) ஆகிய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் கட்சிக்கு நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், அமைச்சர் பதவியை பி.நாகேந்திரா ராஜினாமா செய்தார். கண்ணீருடன் தனது ராஜினாமா முடிவை அவர் அறிவித்தார்.

கர்நாடகாவில் சித்தராமையா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டிருந்த பி. நாகேந்திரா, சிவக்குமார் தலைமையில் கடந்த மாதம் அமைக்கப்பட்ட மந்திரி சபையில் இடம் பிடித்திருந்தார். வால்மீகி கார்ப்பரேசன் முறைகே வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அமைச்சரவையில் இருந்த விலக வேண்டும் என்ற பாஜக வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையில்தான் அமைச்சர் பதவியை பி. நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக பி. நாகேந்திரா கூறியதாவது:-
வால்மீகி பரிமாற்றத்தில் என்னுடைய கையெழுத்து எங்கேயாவது இருக்கிறதா?. நான் தலித் என்பதால் டார்கெட் செய்யப்பட்டுள்ளேன். குறிப்பிட்ட பணப் பரிவர்த்தனைகளில் வங்கிகள் சம்பந்தப்பட்டிருக்கும்போது, தன்னை ஏன் இதற்கெல்லாம் பொறுப்பாக்குகிறார்கள். அப்படியானால் மத்திய நிதியமைச்சர்தான் இதற்குப் பொறுப்பா?. கர்நாடக மக்கள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனக்கு எதிராகத் தினமும் ஆயிரம் பொய்கள் சொல்லப்படுகின்றன.

இவ்வாறு பி. நாகேந்திரா தெரிவித்துள்ளார்.