தமிழகத்திற்கு தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகாவுக்கு துளியும் இல்லை : அமைச்சர் துரைமுருகன்

 
duraimurugan

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடன் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாடு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு சந்திப்பு நடத்தியது.   தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிடும்படி  கர்நாடகா அரசுக்கு  வலியுறுத்துமாறு மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
TN

இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் , தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும் எண்ணம்  கர்நாடகாவுக்கு இல்லை. கர்நாடகாவிடம் தண்ணீர் இருந்தும் தர மறுக்கிறது.  தமிழகத்திற்கு வர வேண்டிய நீர் குறித்து மத்திய அமைச்சரிடம்   விளக்கிக் கூறினோம்.  நெருக்கடியான நேரத்தில் நீர் பகிர்வை எப்படி தரவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது .உச்சநீதிமன்றம் கூறியபடி காவிரி நீரை வழங்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம் என்றார். 

 டெல்லியில் கடந்த 12ஆம் தேதி  நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று வாரியம் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு பரிந்துரைத்தது.இருப்பினும் கர்நாடக அரசு இதை பின்பற்றவில்லை.