“மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவிற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும் உதவும்”- கர்நாடக முதல்வர்

 
ச்

உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா துணை முதலமைச்சர் மல்லு பாட்டி விக்ரமார்கா, கேரள முதலமைச்சர் வீ.டி. சதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், “நீர் நம்மை ஒன்றிணைக்க வேண்டும், பிரிக்கக்கூடாது. நாங்கள் புகார் கூற வரவில்லை. இந்தியாவின் வளர்ச்சியில் பங்குதாரர்களாக வந்துள்ளோம். எங்களுக்குத் தேவை நியாயம் மட்டுமே. மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவிற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும் உதவும். மேகதாது அணை கர்நாடகாவிற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும் முக்கியம்.. உங்களுக்கு உதவ நீங்க எங்களுக்கு உதவுங்கள். ஆந்திராவின் எதிர்ப்பால் கிருஷ்ணா நதி நீரை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேகதாதுவில் அணை கட்டப்படாததால் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. நதி நீர் பங்கீடு என்ற நிலையில் இருந்து நதீநீர் ஒத்துழைப்பு என்ற நிலைக்கு நகர வேண்டிய நேரம்” என்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், “மாநிலங்களுக்கு இடையே நதி நீர் பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும். போதை பொருட்களை தடுக்க மாநிலங்களுக்கு இடையே கூட்டமைப்பு தேவைப்படுகிறது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். காவிரி மேலாண்மை உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும். முல்லை பெரியார் அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.