புத்தாண்டு வாழ்த்து எனும் பேரில் வரும் ஆப்பு...போலீசார் எச்சரிக்கை

 
police

புத்தாண்டு வாழ்த்து எனும் பேரில் அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் apk file அல்லது லிங்க்களை கிளிக் செய்ய வேண்டாம் என கன்னியாகுமரி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புத்தாண்டை முன்னிட்டு உங்களது வாட்ஸப் எண்ணிற்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் என ஒரு apk file அல்லது link செய்தி வரும். * அந்த செய்தியில் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கும். * நீங்கள் அந்த apk file ஐ download செய்துவிட்டால் உங்களது செல்போன் உடனடியாக hack செய்யப்பட்டு உங்களது வங்கி கணக்கு தொடர்பான விபரங்கள் திருடப்பட்டு பண மோசடி செய்து விடுவார்கள்.

எனவே வாட்ஸப் ல் வரும் இது போன்ற புத்தாண்டு apk file அல்லது link ஐ தவிர்க்க வேண்டும். * இது போன்று பண மோசடி நடைபெற்றால் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.