தமிழ்நாட்டிற்கே முன் உதாரணமாக சுற்றறிக்கை அனுப்பிய கன்னியாகுமரி கலெக்டர் பிரதாப்

 
s

கன்னியாகுமரி கலெக்டர் பிரதாப் தமிழ்நாட்டிற்கு முன்னுதாரணமாக ஒரு அதிரடியான சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். 

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது அடிக்கடி ஊழியர்களிடம் கணக்கில் வராத பணம் பிடிபடுகிறது. அவ்வாறு பணம் பிடிபடும் பட்சத்தில் அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக பணத்தை வைத்திருந்ததாக கூறுகின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு சென்றாலும் அதிகாரிகள் எவ்வளவு பணம் வைக்க வேண்டும். கணக்கில் வராத பணம் என்பதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக அரசு சார்பில் ஏதாவது சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா என்று சமீபத்தில் நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார். 

இந்த நிலையில் கன்னியாகுமரி கலெக்டர் பிரதாப் தமிழ்நாட்டிற்கு முன்னுதாரணமாக ஒரு அதிரடியான சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணம் கொண்டு வரும் ஊழியர்கள் அதற்கான பர்சனல் ரிஜிஸ்டர் கேஷ் என்ற பதிவேட்டில் எவ்வளவு பணம் கொண்டு வந்தோம் என்பதை தினமும் பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவேடு கண்டிப்பாக சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலரால் தினமும் பராமரிக்க வேண்டும். அரசு ஊழியர்கள் அதிகப்படியான ரொக்கத்தை வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி அறிவுறுத்தியுள்ளார். அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் முன் உதாரணமாக உள்ள இந்த அறிக்கை சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.