கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் 2வது முறையாக சேதம்
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி பாலம் 2முறையாக சேதமடைந்தது.

கடந்த 9 மாதங்களுக்கு முன் கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி பாலம் திறந்து வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான சுற்று பயணிகள் தினமும் கண்ணாடி பாலத்தை பயன்படுத்திவருகின்றனர். இந்நிலையில் அந்த கண்ணாடி பாலம் 2முறையாக சேதமடைந்தது. கண்ணாடி பாலத்தில் விரிசல் விழுந்துள்ள நிலையிலும் சுற்றுப்பயணிகள் நடந்து செல்ல மாவட்ட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆபத்தை அறியாமல் விரிசல் அடைந்துள்ள கண்ணாடியின் அருகே நின்று பொதுமக்கள் செல்ஃபி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, “திருவள்ளூர் சிலை இணைப்பு கண்ணாடி பாலம் மிகவும் உறுதியாக உள்ளது. மேலே பராமரிப்பு பணியின்போது 7 அடி உயரத்தில் இருந்த் விழுந்த சுத்தியால் நான்கடுக்கு கண்ணாடியின் முதல் அடுக்கில் மெல்லிய கீறல் ஏற்பட்டது. பாலம் உறுதியாக உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. புதிய கண்ணாடி பொருத்தும் பணிகள் 2 நாட்களுக்குள் முடிவையும்” எனக் கூறியுள்ளார்.


