மாணவியின் மர்ம மரணம் - வெடித்த வன்முறை ; வானத்தை நோக்கி காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு!!

 
tn

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி 12ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பள்ளி விடுதி வளாகத்தில் மாணவி அடிப்பட்ட நிலையில் கண்ட விடுதி காவலர் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்த பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் வரும் நிலையில், மாணவியின் பெற்றோர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில்  கள்ளக்குறிச்சி,சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில்  நுழைவு வாயிலை உடைத்து பள்ளிக்குள்  போராட்டக்காரர்கள் நுழைந்தனர்.  பள்ளியின் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்களை சூறையாடியனர்.  

tn

அத்துடன் போலீசார் மீது கண்ணாடி பாட்டில்,செருப்பு,கண்ணாடி பாட்டில் உள்ளிட்ட பொருட்களை போராட்டக்காரர்கள் கல்வீசியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.  போராட்டத்தை நிறுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டக்காரர்களுக்கு டிஐஜி பாண்டியன் எச்சரிக்கை விடுத்தார். 

tn

இருப்பினும் போராட்டம் கைவிடப்படாததால் கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டோரை விரட்ட வானத்தை நோக்கி போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  பள்ளி மாணவி மரணத்துக்கு காரணமானோரை தண்டிக்ககோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் திடீரென பள்ளியில் புகுந்து வன்முறை வெடித்தது பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.