மகளிர் இடஒதுக்கீடு மசோதா கண்துடைப்பு போல் இருக்கிறது - கனிமொழி கருத்து

 
kanimozhi

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறைக்கு பிறகுதான் செயல்படுத்துவோம் என்பது கண்துடைப்பு போல் இருக்கிறது என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். 

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு ‘நாரி சக்தி வந்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது.   128வது அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்படுகிறது. பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான தொகுதிகளிலும் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு ஒதுக்கப்பட உள்ளது/தொகுதி மறு வரையறை செய்யப்பட்ட பிறகே மகளிர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வர இருக்கிறது. 

Kanimozhi

இந்த மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி. கனிமொழி, மகளிர் இடஒதுக்கீடு மசோதா செயல்படுத்தப்பட்டால் நிச்சயமாக மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும். மசோதாவை கொண்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறைக்கு பிறகுதான் செயல்படுத்துவோம் என்பது கண்துடைப்பு போல் இருக்கிறது. மசோதாவை இந்த தேர்தலுக்காக கொண்டுவந்ததாக தெரியவில்லை, ஆனால் தேர்தலுக்கான ஒரு அறிவிப்பு. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்துவிட்டோம், பெண்களுக்காக நாங்கள் இவ்வளவு பெரிய விஷயத்தை செய்திருக்கிறோம் என வாக்கு வங்கிக்காக கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இவ்வாறு கூறினார்.