தூத்துக்குடியில் கனிமொழி மீண்டும் அபார வெற்றி! 27 வேட்பாளர்களுக்கு டெபாசிட் காலி

 
கனிமொழி

தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 3,03,403 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

தூத்துக்குடி : கனிமொழி வெற்றி உறுதி!
 

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர். அதிமுக வேட்பாள சிவசாமி வேலுமணி, தமாக வேட்பாளர் விஜயசீலன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவீனா ரூத் ஜோன் உள்ளிட்ட 27 வேட்பாளர்களுக்கும் டெபாசிட் காலியானது.

 

இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி 5,37,879 வாக்குகள் பெற்று 3,90,472 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 1,47,407 வாக்குகளுடன் 2-வது இடத்திலும், பாஜக கூட்டணி வேட்பாளர் விஜயசீலன் 1,21,680 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினோ ரூத் ஜேன் 1,19,374 வாக்குகளுடன் 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.