"பாதிக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக.." - கனிமொழி

 
பாதிக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக... - கனிமொழி

ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெருவை சேர்ந்த பள்ளி மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்தை கொலை வழக்காக மாற்றகோரியும், வழக்கை CBCIDக்கு மாற்றக்கோரியும் தமிழ்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம் சார்பில் மதுரை காவல் ஆணையர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கனிமொழி எம்பி, “மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தவெக அரசு. உடற்கூறு ஆய்வில் அம்மாணவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், குற்றத்தை விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறை, நீதி கேட்கும் மக்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது. குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையே ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக இந்த தவெக ஆட்சி உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.