“தமிழர்கள் மனங்களில் ஆறாவடு”- கனிமொழி நினைவஞ்சலி
கரூர் பெருந்துயரத்துக்கு திமுக எம்.பி. கனிமொழி நினைவஞ்சலி செலுத்தியுள்ளார்.
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த கோரச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு கடந்துவிட்டது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 27, 2026
இத்துயரச் சம்பவம் ஏற்படுத்திய ரணம், தமிழ் மக்களின் மனங்களில் ஆறாவடுவாக இருக்கிறது. இனி இதுபோன்ற ஒரு துயர நிகழ்வு எங்கும் நடைபெறாத வகையில்,…
இதுதொடர்பாக கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த கோரச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு கடந்துவிட்டது. இத்துயரச் சம்பவம் ஏற்படுத்திய ரணம், தமிழ் மக்களின் மனங்களில் ஆறாவடுவாக இருக்கிறது. இனி இதுபோன்ற ஒரு துயர நிகழ்வு எங்கும் நடைபெறாத வகையில், அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

