தமிழக எம்பிக்கள் நாகரீகமற்றவர்கள் என்று குறிப்பிட்டது வேதனை அளிக்கிறது - கனிமொழி

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதிலில் தமிழக எம்பிக்கள் நாகரீகமற்றவர்கள் என்று குறிப்பிட்டது வேதனை அளிக்கிறது என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக எம்.பிக்கள் நாகரீகமற்றவர்கள் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் தனது கருத்தை திரும்ப பெற்றார். இது தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி பேசியதாவது: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதிலில் தமிழக எம்பிக்கள் நாகரீகமற்றவர்கள் என்று குறிப்பிட்டது வேதனை அளிக்கிறது. சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கான நிதியை விடுவிப்பது தொடர்பாக தான் கல்வி அமைச்சரை தமிழக எம்பிக்கள் உடன் சந்தித்தேன்.
புதிய தேசிய கல்வி கொள்கையில் சில பிரச்சினைகள் இருக்கிறது, அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என தெளிவாக கூறினோம். மும்மொழி கொள்கை ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல, புதிய தேசிய கல்வி கொள்கையை முழுமையாக ஏற்று கொள்ள முடியாது என தெளிவாக கூறினோம்.தர்மேந்திர பிரதான் பதில் வேதனை அளிக்கிறது.