“அரசியல் நாகரிகமோ, அடிப்படை அறமோ அதிமுகவினருக்கு என்றும் இருந்ததில்லை”- கனிமொழி

 
kanimozhi

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அருவருக்கத்தக்கப் பேச்சுக்கு திமுக எம்.பி., கனிமொழி காட்டமான விமர்சனம் செய்துள்ளார்.


தமிழக முதல்வர் கனவை சொல்லுங்கள் என்கிறார் எனக்கு நடிகை நயன்தாரா வேண்டும் கொடுப்பாரா? என்று விழுப்புரத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “அரசியல் நாகரிகமோ, அடிப்படை அறமோ அதிமுகவினருக்கு என்றும் இருந்ததில்லை. அதனால், பெண்களை இழிவு படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் தனது கட்சியைச் சார்ந்த இந்த நபரின் அருவருக்கத்தக்கப் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்பது வீண்” எனக் குறிப்பிட்டுள்ளார்.