தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க மத்திய அமைச்சரிடம் கனிமொழி எம்பி கோரிக்கை
கட்சத்தீவு அருகே கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த 10 மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து திமுக எம்.பி கனிமொழி எம்.பி. வலியுறுத்தினார்.
கடலோர காவல்படையினரால் லட்சத்தீவுகளின் அருகில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தருவைகுளம் பகுதியை சேர்ந்த பத்து மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுதலை செய்யவும், குஜராத், போர்பந்தர் அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது கடலில் தவறி விழுந்த தூத்துக்குடி அயன்பொம்மையாபுரத்தை சேர்ந்த மீனவர் அண்ணாதுரையை தேடும் பணியை துரிதப்படுத்தி கண்டுபிடித்து தரக் கோரியும், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களிடம் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. கனிமொழி எம்பி அவர்கள் நேரில் சந்தித்து கடிதம் வழங்கிக் கேட்டுகொண்டார்.