“தமிழ்நாட்டில் யாருடைய வாக்குரிமையும் பறிக்ககூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது” - கனிமொழி

 
கனிமொழி கனிமொழி

தூத்துக்குடி சோரிஸ் புரம் பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பேரிடர் காலத்தில் பொதுமக்கள் தங்குவதற்கான பாதுகாப்பு மைய கட்டிடம் மற்றும் மாதிரி பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். 

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “ இந்த பகுதியில் மழை வெள்ள பாதிப்பு ஏற்படும்போது பொதுமக்கள் பாதுகாப்பாக தங்குவதற்காக பாதுகாப்பு மைய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும் மற்ற நேரங்களில் மாதிரி பள்ளியாக இந்த கட்டிடம் செயல்படுத்தப்படும். இதில் பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருப்பதற்கான நடவடிக்கைகளும் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலக்கூடிய வசதியும் செய்யப்படும்.

வாக்காளர் சிறப்பு திருத்தத்தில் மற்ற மாநிலங்களில் ஏற்பட்ட குறைபாடு இங்கு இருக்காது என்ற வகையிலே தமிழக முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிற உடன்பிறப்புகளுக்கு தெளிவான ஆணைகளை விளக்கங்களை தந்திருக்கிறார்கள். எப்படி இதை எதிர்கொள்வது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் பல இடங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் லட்சக்கணக்கானவர்களுடைய வாக்குரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. அது தமிழகத்தில் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் , பீகார் தேர்தலை பொருத்தவரை நீதி வெல்ல வேண்டும் ஜனநாயகம் வெல்ல வேண்டும் மக்கள் வெல்ல வேண்டும் என்பதுதான் அத்தனை பேருடைய ஆசை அது நடக்க வேண்டும். பீகார் போன்ற பல மாநிலங்கள SIR ஐ பயன்படுத்தி லட்சக்கணக்கானவர்களின் வாக்குரிமை பறித்ததுபோல தமிழ்நாட்டில் நடக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்” என்றார்.