தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிக்கும் முயற்சி- வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எம்.பி. கண்டனம்

 
Kanimozhi

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் வந்தே மாதரம் பாடலுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி எம்.பி., “வந்தே மாதரம் பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்ட திருத்த மசோதவை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறியும் மாநிலங்களவையில் நிறைவேற்றியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. வந்தே மாதரத்தை வலிந்து திணிப்பதுடன், இதுவரை தமிழ்நாட்டில் முதல் பாடலாக பாடப்பட்டுவந்த தமிழ்த்தாய் வாழ்த்தை நிரந்தரமாக இருட்டடிப்பு செய்யும் நோக்கிலுள்ள இச்சட்ட மசோதாவை ஒருபோதும் ஏற்கமுடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.