விஜய்-க்கு கனிமொழி வாழ்த்து

 
tn

புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

vijay

நடிகர் விஜய்  தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை தொடங்கி அரசியலில் கால் பதித்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின்,வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் ,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Kanimozhi

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி., "நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு எல்லா உரிமைகளும் உள்ளது; சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிடப் போவதால், திமுகவுக்கு நிச்சயமாக எந்த பாதிப்பும் ஏற்படாது

சாதி, மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி பிரிக்கக்கூடாது என்பதைத்தான் எல்லோருமே கூறிக்கொண்டிருக்கிறோம்; இதை இப்போது அல்ல, அப்போதிலிருந்தே தொடர்ந்து நாங்கள் கூறிக்கொண்டு இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.