அமைச்சர் பொன்முடியின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது - கனிமொழி கண்டனம்!

எந்த காரணத்திற்காக பேசப் பட்டிருந்தாலும் பொன்முடியின் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி அவ்வபோது சர்ச்சையான கருத்துக்களை கூறி மாட்டிக்கொள்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் விடியல் பயணம் தொடர்பாக பேசிய அமைச்சர் பொன்முடி, பேருந்தில் பெண்கள் ஓசியில் தானே போகிறீர்கள் என கூறினார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது திமுக நிகழ்ச்சி ஒன்றி பேசிய பொன்முடி, வைணவம் மற்றும் சைவம் குறித்தும் விலைமாதுகள் குறித்தும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொன்முடியின் இந்த கருத்துக்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 11, 2025
இந்த நிலையில், அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கனிமொழி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது.