2029ல் பிரதமர் வேட்பாளர் எங்கள் தலைவர் விஜய் தான் : கனிமொழி, தாரகை இடையே மோதல்..!
தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “2029இல் பிரதமர் வேட்பாளர் எங்கள் தலைவர் தான். 2025இல் நான் கணித்ததைப் போல 2026இல் விஜய் முதலமைச்சரானார். 2026இல் சொல்கிறேன் 2029இல் தமிழகத்திலிருந்துதான் பிரதமர் உருவாகப் போகிறார்” என்றார்.
மேலும், “2029இல் இந்திய அரசியலில் மாற்றம் நிகழப்போகிறது. பிரதமரை இனி டெல்லியில் இருந்து முடிவு செய்யப்போவது இல்லை. ராகுல் காந்திதான் விஜயை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தார். அதேபோல் ராகுல் காந்தியே தலைவர் தளபதியை அவரை பிரதமராக அமர வைப்பார்” என்றும் கனிமொழி தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், “அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் ராகுல் காந்திதான். முதலமைச்சர் விஜய்யே இதுவரை ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று கூறியுள்ளார். தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ரசிகர் மனநிலையில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தலைவரைத்தான் சொல்வார்கள். ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர். காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்ல, இந்தியாவே இதுகுறித்து தெளிவாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
பிரதமர் வேட்பாளர் யார்?: தாரகை VS கனிமொழி | TN Assembly | CM Vijay#TNAssembly2026 #TamilNaduAssemblyToday #TNPolitics #TamilNaduPolitics #TamilNaduPoliticalNews pic.twitter.com/5o5IG9S7s1
— PttvOnlinenews (@PttvNewsX) September 2, 2026

