திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா - சிறப்பு பணி அலுவலர்கள் நியமனம்!!

 
tiruchendur

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவுக்கான சிறப்பு பணி அலுவலர்களை நியமனம் செய்து இந்த சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

tiruchendur murugan temple

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள உத்தரவில் , தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நடைபெறுவதையொட்டி திருக்கோயில்களில் பக்தர்களின் வருகையினை சீர்படுத்திடவும், தரிசன முறைகளை நெறிப்படுத்திடவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்கிடுதல் போன்ற அனைத்து பணிகளையும் கண்காணித்திட மண்டல இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களை சிறப்பு பணி அலுவலர்களாக (15.11.2023 முதல் 19.11.2023 வரை) நியமனம் செய்து உத்தரவிடப்படுகிறது.

tn

இச்சிறப்பு பணி அலுவலர்களுடன் கீழே அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலர்களை மேற்படி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் போது சிறப்பு பணிப்புரிந்திடவும் உத்தரவிடப்படுகிறது.என்றார்.