திருச்செந்தூரில் கோலாகலமாகத் தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு திருச்செந்தூர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்து முருகப் பெருமானை தரிசனம் செய்து செய்வார்கள். இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா விமர்சையாக தொடங்கியுள்ளது. கந்தசஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் வருகிற 18-ஆம் தேதி நடைபெறும் நிலையில் இன்று விழா தொடங்கியுள்ளது.
கந்த சஷ்டி திருவிழா துவங்கிய நிலையில் அங்க பிரதட்ஷனம் செய்து பக்தர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர் அத்துடன் கந்தசஷ்டி விரதம் இருப்பதற்காக திருச்செந்தூரில் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.