‘கனா’ சீரியல் நடிகைக்கு திடீரென முடிந்த திருமணம்..!
Apr 16, 2024, 06:35 IST1713229554000
![1](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/53f194fb2eaa718cf242a0fc9c35f98f.webp)
ஜீ தமிழில் ‘கனா’ என்ற சீரியலில் நடித்து வந்த நடிகை தர்ஷனா அசோகனுக்கு (ஏப்ரல் 15) சத்தமில்லாமல் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்களை அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு அவர் ‘கனா’ சீரியலை விட்டு விலகிய போது திருமணத்தின் காரணமாகத்தான் விலகுகிறார் என்று தகவல் வெளியானது. ஆனால் இத்தனை நாள் மௌனமாக இருந்து வந்த அவர், தனது நீண்டநாள் காதலன் அபிஷேக்கை கரம் பிடித்துள்ளார்.