"கோவை காமாட்சிபுரி ஆதீனம் மறைவு செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது" - தினகரன் இரங்கல்

 
ttv

கோவை காமாட்சிபுரி ஆதீனம் மறைவுக்கு தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "மாணவர்களுக்கு கல்வி அறிவோடு தெய்வபக்தியும் அவசியம் என்பதை எடுத்துரைத்த கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

tn

 இதயதெய்வம் அம்மா அவர்கள் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சிலைக்கு தங்கக் கவசம் வழங்கிய நிகழ்வை சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் முன்னின்று நடத்தியதை இந்நேரத்தில் நினைவில் கொள்கிறேன்.

tn

 ஆதீனம் அவர்களை இழந்துவாடும் பக்தர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.