கோவை காமாட்சிபுரி ஆதீனம் மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல்

 
op

கோவை காமாட்சிபுரி ஆதீனம் மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரு மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51-வது சக்திபீடம் குருமகா சன்னிதானம் குரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். 

tn

இளம் வயதிலிருந்தே ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு, இறைப் பணியோடு சமுதாயப் பணியையும் மேற்கொண்டவர் சுவாமிகள். நூற்றுக்கணக்கான திருக்கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்து வைத்த பெருமை இவருக்கு உண்டு. இவரது இழப்பு ஆன்மீகவாதிகளுக்கு பேரிழப்பாகும். 


ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் அவர்களை பிரிந்து வாடும் பக்தர்களுக்கும், ஆதீனத்தைச் சேர்ந்தவர்களுக்கும், ஆன்மீகவாதிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்