கோவை காமாட்சிபுரி ஆதீனம் மறைவு - அண்ணாமலை இரங்கல்

 
annamalai

கோவை காமாட்சிபுரி ஆதீனம் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், வணக்கத்திற்குரிய கோவை காமாட்சிபுரி ஆதீனம், சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் அவர்கள், இறைவன் திருவடிகள் அடைந்தார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது. 


பொதுமக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில்,  துணிச்சலுடன் குரல் கொடுத்தவர். ஏற்றத்தாழ்வின்றி, அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வலியுறுத்தியவர். புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்புவிழாவில் பங்கு கொண்டு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு 
@narendramodi அவர்களுக்கு செங்கோல் வழங்கி ஆசி வழங்கியவர்.

ஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகளைப் பிரிந்து வாடும் பக்தர்கள் அனைவருக்கும், 
@BJP4Tamilnadu
 சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி ! என்று குறிப்பிட்டுள்ளார்.