காமராசரின் 120வது பிறந்தநாள் - ஈபிஎஸ், கமல் ஹாசன் ட்வீட்!!

 
tn

 தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராசரின் 120வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  கட்டாயக்கல்வி, இலவசக்கல்வி, மதிய உணவுத்திட்டம் என பல திட்டங்களை தொடங்கி இவர் தமிழ்நாட்டில் கல்விப் புரட்சியை உருவாக்கிய பெருமைக்குரியவர்.  பெருந்தலைவர் காமராசர்  விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் . காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து  1919 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டார். 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்புச் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார்.  இதனைத் தொடர்ந்து அரசியல் பணியில் ஈடுபட்டு வந்தார். 1954 ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற பெருந்தலைவர் காமராசர் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று பல நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். 

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் : தமிழக அரசு சார்பில் மரியாதை..
இந்நிலையில் காமராசரின் 120வது பிறந்தநாளில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "கல்விக் கண் திறந்த கர்ம வீரர், வேளாண் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உயரிய குறிக்கோளை செயல்படுத்திய வேளாண்மை நாயகர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெருமைகளை போற்றி அவரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் : தமிழக அரசு சார்பில் மரியாதை..

அதேபோல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், "கல்விக்கண் திறக்க வேண்டும் என்பதற்காக வயிற்றுக்குச் சோறிட்டு வழிகாட்டியவர் கருணைத் தலைவர் காமராஜர்.  உதாரண ஆட்சி அளித்தவராக இன்றைக்கும் போற்றப்படும் பெருந்தலைவரை அவரது பிறந்த நாளில் வணங்குவது நமது பெருமை" என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.